search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காள தேசம் ஜிம்பாப்வே கிரிக்கெட்"

    டாக்காவில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்டில் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. #BANvZIM
    வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. மொமினுல் ஹக்யூ (161), முஷ்பிகுர் ரஹிம் (219 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்தது.

    பின்னர் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சை தொடங்கியது. பிரெண்டன் டெய்லர் (110), பிரையர் சரி (53), மூர் (83) ஆகியோரின் ஆட்டத்தால் 304 ரன்கள் சேர்த்தது.

    முதல் இன்னிங்சில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்காள தேசம் பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மெஹ்முதுல்லா (101 நாட்அவுட்) சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 442 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    443 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்திருந்தது. பிரெண்டன் டெய்லர் 4 ரன்னுடனும், வில்லியம்ஸ் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. வில்லியம்ஸ் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜிம்பாப்வே-யின் விக்கெட் சராசரி இடைவெளியில் இழந்தது. ஆனால் பிரெண்டன் டெய்லர் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பிரெண்டன் டெய்லர் 106 ரன்னுடனும் களத்தில் இருந்தாலும் ஜிம்பாப்வே 83.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காள தேசம் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காள தேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்காள தேசம் தொடரை 1-1 என சமன் செய்தது.
    சியால்ஹெட்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 143 ரன்னில் சுருட்டியது ஜிம்பாப்வே. #BANvZIM
    வங்காள தேசம்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சியால்ஹெட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க பேட்ஸ்மேன் மசகட்சா 52 ரன்களும், வில்லியம்ஸ் 88 ரன்களும் அடிக்க ஜிம்பாப்வே முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் சேர்த்தது. மூர் 37 ரன்களுடனும், சகப்வா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சகப்வா 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மூர் அரைசதம் அடித்து 63 எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே 282 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    வங்காள தேச அணியின் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது.

    ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொந்த மைதானத்திலேயே வங்காள தேசம் திணறியது. லிட்டோன் தாஸ் (9), இம்ருல் கெய்ஸ் (5), மொமினுல் ஹக்யூ (11), நஸ்முல் ஹொசைன் ஷான்டோ (5), மெஹ்முதுல்லா (0) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.



    இதனால் 19 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் வந்த முஷ்பிகுர் ரஹிம் (31), அரிபுல் ஹக்யூ (41 நாட்அவுட்), மெஹிது ஹசன் மிராஸ் (21) ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாட 143 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 139 ரன்கள் முன்னிலைப்பெற்றது. 139 ரன்களுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ரன் எடுத்துள்ளது. இதுவரை ஜிம்பாப்வே 140 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

    2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் சேர்த்தால் வங்காள தேச அணிக்கு மிகப்பெரிய நெருக்கடி உருவாக வாய்ப்புள்ளது.
    ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணியில் ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் இடம்பெறவில்லை. #BANvZIM
    வங்காள தேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது படுதோல்வியை சந்தித்தது. தற்போது சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடர் முடிந்த பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து ஐந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    ஷாகிப் அல் ஹசன் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் காயத்தால் இடம்பெறவில்லை. புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கலித் அஹ்மது அணியில் இடம்பிடித்துள்ளார். இவருடன் முகமது மிதுன், நஸ்முல் இஸ்லாம், ஆல்ரவுண்டர் அரிபுல் ஹக்யூ ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மானும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    வங்காள தேச அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மெஹ்முதுல்லா (கேப்டன்), 2. இம்ருல் கெய்ஸ், 3. லிட்டோன் தாஸ், 4. மொமினுல் ஹக்யூ, 5. நஸ்முல் ஹொசைன், 6. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 7. முஷ்பிகுர் ரஹிம், 8. அரிபுல் ஹக்யூ. 9. மெஹிது ஹசன், 10. தைஜுல் இஸ்லாம், 11. அபு ஜாயெத், 12. ஷபியூல் இஸ்லாம், 13. முகமது மிதுன், 14. கலித் அஹமது, 15. நஸ்முல் இஸ்லாம்.

    முதல் டெஸ்ட் நவம்பர் 3-ந்தேதி தொடங்குகிறது.
    ×